ஆடி வந்தாலே...
UPDATED : ஜூலை 26, 2024 | ADDED : ஜூலை 26, 2024
ஆடி மாதம் வந்தாலே ஊரெங்கும் அம்பிகை வழிபாடு களைகட்டும். தெய்வீகம் மிக்க ஆடி, அம்மனுக்கு உரியதாக உள்ளது. ஆடியில் தவத்தில் ஈடுபட்ட பார்வதியை மெச்சிய சிவன், இந்த மாதத்தை அம்மனுக்கு உரியது என வரமளித்தார். இம்மாதத்தில் சக்திக்குள் சிவன் ஐக்கியமாகி விடுவார். ஆடியில் செவ்வாய், வெள்ளி அன்று மட்டுமின்றி ஆடிப்பூரம், அமாவாசை, பவுர்ணமி நாட்களும் வழிபாட்டுக்கு உகந்தவை.