உள்ளூர் செய்திகள்

குருவருள் சேர...

* மஞ்சள் வஸ்திரத்தை கோயில் பூஜைக்கு கொடுத்தால் குருவருள் சேரும். * குரு என்றால் குற்றத்தை நீக்குபவர், இருளை போக்கி ஒளி தருபவர், அறியாமை போக்கி அருள் பாய்ச்சுபவர் எனப் பொருள். கு - குற்றம், ரு - நீக்குபவர். * எந்தச் செயலை செய்தாலும் அதை குருவின் மூலமாக செய்தால் முழுப்பலன் தரும். எண்ணம், சொல், செயலால் பக்குவம் அடைந்தவருக்கு குருநாதராக சிவபெருமானே எழுந்தருள்வார். * குருநாதருக்கு செய்யும் உதவி ஆயிரம் அஸ்வமேத யாகத்திற்கு சமம்.