உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் என்ன

ஜூன் 13 வைகாசி 30: மதுரை கூடலழகர் கருட வாகனம். சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் தங்கப்பல்லக்கு. ஜூன் 14 வைகாசி 31: சங்கடஹர சதுர்த்தி. அரியக்குடி சீனிவாசப்பெருமாள் தெப்போற்ஸவம். மன்னார்குடி ராஜகோபால சுவாமி, திருச்சேறை சாரநாதர், ராமகிரிபேட்டை கல்யாண வெங்கடேசப் பெருமாள் திருமஞ்சனம். குமரகுருபரர் குருபூஜை. ஜூன் 15 ஆனி 1: திருவோண விரதம். ஷடசீதி புண்ணிய காலம். சாத்துார் வெங்கடேசர் தோளுக்கினியானில் பவனி. ஒப்பிலியப்பன் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயர் திருமஞ்சனம். கரிநாள். ஜூன் 16 ஆனி 2: முகூர்த்த நாள். கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் சன்னதியில் கருடாழ்வார் திருமஞ்சனம். திருத்தணி முருகன் பால் அபிஷேகம். ஜூன் 17 ஆனி 3: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் தேர். சுவாமிமலை முருகன் தங்கப்பூமாலை சூடியருளல். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பால் அபிஷேகம். ஜூன் 18 ஆனி 4: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம். திருத்தணி முருகனுக்கு பால் அபிஷேகம். ஜூன் 19 ஆனி 5: திருப்பதி ஏழுமலையான் மைசூரு மண்டபம் எழுந்தருளல். சுவாமிமலை முருகன் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.