உள்ளூர் செய்திகள்

அம்மன் மனம் குளிர...

தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்தான் பண்டாசுரன். அவர்கள் தங்களை காக்க வேண்டி அம்பிகையை சரணடைந்தனர். உடனே ஒரு வேள்வி குண்டத்தில் இருந்து ஸ்ரீசக்ர ரதத்தில் லலிதாம்பிகை என்ற திருநாமத்துடன் புறப்பட்டாள். அசுரனுடன் போர் செய்து அவனை அழித்தாள். உக்கிரமாக இருந்த அவளைச் சாந்தப்படுத்த, ''உனது கோபம் தணிய 'மனோன்மணி' என்ற பெயரில் பூமிக்கு சென்று தவம் செய்'' என்றார் சிவபெருமான். அதன்படி திருமீயச்சூர் என்னும் தலத்தில் தவம் புரிந்தாள். பின்னர் முகத்தில் இருந்து 'வசின்யாதி வாக் தேவதைகள்' என்பவர்களை வரவழைத்து ஆயிரம் திருநாமங்களால் வர்ணிக்கும்படி கட்டளையிட்டாள். இதுவே 'ஸ்ரீ மாத்ரே' எனத் துவங்கும் 'லலிதா சகஸ்ரநாமம்' ஆகும். லலிதா சகஸ்ரநாமத்தை சொன்னால் மனம் குளிர்ந்து அம்மன் வரம் தருவாள்.