முருகனின் மூலமந்திரம்
UPDATED : ஜூன் 19, 2025 | ADDED : ஜூன் 19, 2025
முருகனின் மூலமந்திரம் 'ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் ஸெளம் நமஹ'. சாந்தானந்த சுவாமிகள் இயற்றிய கந்தகுரு கவசத்தில் இந்த மந்திரம் உள்ளது. சக்தி வாய்ந்த இதை 48 நாட்கள் தினமும் 108 முறை ஜபித்து வர நினைத்தது நிறைவேறும். இதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள் 48 வாரம் செவ்வாய் அல்லது வெள்ளி அன்று ஜபிக்கலாம். காலையில் நீராடி 6:00 - 7:00 மணிக்குள் முருகன் கோயில் அல்லது முருகன் படத்தின் முன் அமர்ந்து 108 முறை ஜபிக்க வேண்டும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் மூலமந்திரத்தை ஜபிக்க திருமணயோகம் உண்டாகும். கடன் பிரச்னை தீரும். ஒருவர் தன் வாழ்நாளுக்குள் 21 லட்சம் முறை ஜபித்தால் முருகன் அருளால் பிறவாத வரம் கிடைக்கும்.