குட்டு வைக்க மறவாதீர்!
UPDATED : ஆக 20, 2025 | ADDED : ஆக 20, 2025
தனலாபம் கிடைக்க லட்சுமி ஹோமம் நடத்தினாலும், உடல்நலம் பெற சூரிய நாராயண பூஜை செய்தாலும், அம்பிகை அருள் பெற சண்டி ஹோமம் செய்தாலும் அதற்கு முன்னதாக விநாயகரை பூஜிக்க வேண்டும். செய்யும் செயலில் விக்னம்(தடை) ஏற்படாமல் இருக்க விநாயகரை வணங்குகிறோம். இதை விட இன்னொரு காரணமும் உண்டு. மனிதர்களான நமக்குத் தான் தடை ஏற்படும் என்பதில்லை.நாம் வழிபடும் தெய்வங்களுக்கும் அருள் புரிவதில் தடை ஏற்படலாம். அதற்காகவும் விநாயகர் பூஜை செய்வது அவசியம். இதனால் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் மறக்காமல் விநாயகர் ஸ்லோகம் சொல்லி நெற்றியில் குட்டிய பின்னரே வழிபாட்டை தொடங்க வேண்டும்.