உள்ளூர் செய்திகள்

கந்தசஷ்டி கொண்டாடுவது ஏன்?

கஷ்யபர், மாயைக்கு பிறந்தவர்கள் அசுரர்களான சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன். இவர்களில் தவத்தில் ஈடுபட்ட சூரபத்மன், ' சிவபெருமானின் ஆற்றலைத் தவிர வேறு யாராலும் தன்னை வெல்ல முடியாது' என வரம் பெற்றான். வரத்தின் பலத்தால் தேவர்களைத் துன்புறுத்தவே, அவர்கள் சிவபெருமானைச் சரணடைந்தனர். அவர் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை உண்டாக்க, அவை சரவணப் பொய்கையை அடைந்து குழந்தைகளாக மாறின. கார்த்திகைப் பெண்கள் அவர்களை வளர்த்து ஆளாக்கினர். ஆறு குழந்தைகளையும் சேர்த்து அணைத்த பார்வதி ஒரே உருவமாக மாற்றி 'கந்தன்' என அக்குழந்தைக்கு பெயரிட்டாள். தன் சக்தியெல்லாம் திரட்டி வேல் ஒன்றை உருவாக்கி அதை கந்தனுக்கு பரிசாக கொடுத்தாள். வேலுடன் புறப்பட்ட கந்தன், சூரசம்ஹாரம் செய்து தேவர்களைக் காப்பாற்றினார். தனடிப்படையில் ஐப்பசி வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறுநாள் விரதமிருப்பர். கந்தசஷ்டி அன்று (அக்.27, 2025) கோயில்களில் சூரசம்ஹார லீலை நடக்கும். சஷ்டி விரதமிருக்கும் தம்பதியருக்கு அறிவும், அழகும் உள்ள குழந்தை பிறக்கும்.