குறிஞ்சிக் கிழவன்
UPDATED : அக் 23, 2025 | ADDED : அக் 23, 2025
சிவனின் இளைய மகன் முருகனை 'குமரன்' (இளைஞன்) என கேள்விப்பட்டு இருக்கிறோம். இப்பெருமானுக்கு 'குறிஞ்சிக்கிழவன்', 'தமிழ்க்கிழவன்' என்றும் பெயர் உண்டு. 'கிழவன்' என்றால் 'உரிமை கொண்டவன் அல்லது தலைவன்' என பொருள். தமிழ் மொழிக்கு உரியவன் என்பதால் தமிழ்க்கிழவன் என்றும், மலைக்குரிய தெய்வமாக விளங்குவதால் 'குறிஞ்சிக்கிழவன்' என்றும் பெயர் பெற்றார்.