அம்மனின் மாதம்
UPDATED : ஜூலை 18, 2024 | ADDED : ஜூலை 18, 2024
பிரம்மாவின் அருள் பெற்றவன் ஆடி என்னும் அரக்கன். நினைத்ததும் விரும்பிய வடிவத்தை அடையும் ஆற்றலை வரமாக பெற்றவன். இதன்பின் சிவனை ஏமாற்ற விரும்பிய அவன், தன்னை பார்வதி போல மாற்றி விட்டு கைலாயத்திற்குள் நுழைந்தான். விஷயம் அறிந்த சிவன் கோபத்தில் நெற்றிக்கண்ணால் அரக்கனை சாம்பலாக்கினார். ஆனால் அரக்கன் மீது பார்வதிக்கு இரக்கம் உண்டானது. மாதங்களில் ஒன்றுக்கு 'ஆடி' என பெயரிட்டதோடு, அதில் அம்மன் கோயில்களில் வழிபடுவதை ஏற்படுத்தினாள். இதனால் அம்மனின் மாதமான ஆடியில் தபசுவிழா, கூழ் காய்ச்சி ஊற்றுதல், ஆடி வெள்ளி விரதத்தை பக்தர்கள் மேற்கொள்கின்றனர்.