அசுரரை வென்ற இடம்
UPDATED : நவ 17, 2023 | ADDED : நவ 17, 2023
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது வீடாகவும், கடற்கரையோரமாக அமைந்த தலம். அருணகிரிநாதர், நக்கீரரால் பாடல்பெற்றது. சூரபத்மனின் ஆணவத்தை சம்ஹாரம் செய்து அவனை மயிலாகவும் சேவலாகவும் மாற்றி தன் வாகனம், கொடியாக மாற்றி அருளிய தலம். சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய்ப் பெருமாள் ஆகிய நான்கு உற்ஸவரைக் கொண்ட ஒரேத்தலம் என பல சிறப்புகளை கொண்டது தான் திருச்செந்துார். இங்கு முருகனுக்கு 9 கால பூஜை நடக்கிறது. இதில் சிறுபருப்பு பொங்கல், கஞ்சி, தோசை, அப்பம், நெய் சாதம், ஊறுகாய், சர்க்கரை கலந்து பொரி, அதிரசம், தேன்குழல், அப்பம், வேக வைத்த பாசிப்பருப்பு, வெல்லம் கலந்து உருண்டை என விதவிதமான நைவேத்தியங்கள் படைக்கப்படுகிறது.