உள்ளூர் செய்திகள்

கார்த்திகை பெண்களின் பெயர்கள்

சூரியன் கார்த்திகை நட்சத்திரத்தில் இருந்த காலத்தில் சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு பொறிகள் வெளிப்பட்டன. அவையே சரவணப்பொய்கையில் குழந்தையாக அவதரித்தது. ஆறு நட்சத்திரங்களின் கூட்டமைப்பிற்கு கார்த்திகை என்று பெயர். (அம்பா, தாளா, நிதாக்னி, அப்ரயந்தி, மேகயந்தி, வர்ஷயந்தி) அவர்களே முருகனை சீராட்டி பாராட்டி வளர்த்தனர். அவர்களை சிறப்பிக்கும் விதமாக ஒளிபொருந்திய அவர்களுக்குரிய நாளான கார்த்திகையில் முருகப்பெருமானை வழிபாடு செய்கிறோம்.