கண்ணால் மலரும் பூக்கள்
UPDATED : பிப் 02, 2024 | ADDED : பிப் 02, 2024
முருகப்பெருமானின் வலதுபுறம் வள்ளியும், இடது புறம் தெய்வானையும் நின்றிருப்பர். வள்ளி கையில் தாமரை மலரும், தெய்வானை கையில் நீலோற்பவம் மலரும் இருக்கும். முருகனுக்கு வலக்கண்ணாக சூரியனும், இடக்கண்ணாக சந்திரனும் உள்ளனர். சூரியக் கண்ணால் தாமரையும், சந்திரக்கண்ணால் நீலோற்பலம் மலரையும் பார்ப்பதால் எப்போதும் அவை மலர்ந்திருக்கும். இந்த மலரைப் போலவே முருக பக்தர்களின் வாழ்வும் மலர்ந்திருக்கும்.