பிதுர்கடன் அவசியம்
UPDATED : பிப் 09, 2024 | ADDED : பிப் 09, 2024
தற்போது நடப்பது கலியுகம். இதற்கு முந்திய கிருத, திரேதா, துவாபர யுகங்களில் திதி, தர்ப்பணத்தை முன்னோர்கள் நேரில் வந்து ஏற்றனர். இதற்கு காரணம் அந்த யுகங்களில் தர்மம் மிகுதியாக இருந்தது. இதனால் தான் ஸ்ரீராமருக்கு பட்டாபிேஷகம் நடந்த போது அவரது தந்தையார் தசரதர் வானுலகத்தில் இருந்து நேரில் வந்து ஆசியளித்தார். ஆனால் கலியுகத்தில் தர்மம் சீர்குலைந்ததால் முன்னோர்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. ஆனால் சூட்சும வடிவில் நம்மை பார்க்கின்றனர். எனவே பிதுர்கடனை முறையாகச் செய்வது அனைவருக்கும் அவசியம்.