ருத்ராட்சம் பிறந்த கதை
UPDATED : மார் 08, 2024 | ADDED : மார் 08, 2024
திரிபுர அசுரனால் துன்பப்பட்ட தேவர்களைக் காக்க, சிவபெருமான் கண்களை மூடாமல் ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்தார். அப்போது அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அது பூமியில் பட ஒரு மரம் தோன்றியது. அதில் தோன்றிய பழமே ருத்ராட்சம். ருத்ரனாகிய சிவனின் கண்களில் இருந்து வந்ததால் இப்பெயர் ஏற்பட்டது.