இனி இல்லை
கடன் என்பது யாருக்குத்தான் இல்லை? இந்த பிரச்னையில் இருந்து விடுபட கீழ்க்கண்ட பரிகாரங்களைச் செய்தால் நன்மை கிடைக்கும். 1. தொடர்ந்து மூன்று பவுர்ணமி நாட்களில் குலதெய்வத்தை வழிபடுங்கள். கோயில் அருகில் இல்லாவிட்டால் வீட்டிலேயே குலதெய்வம் இருக்கும் திசை நோக்கி ஐந்துமுக தீபமேற்றுங்கள். இப்படி தொடர்ந்து ஒன்பது பவுர்ணமியன்று வழிபடுங்கள். 2. வீட்டில் லட்சுமி நரசிம்மர் படம் வைத்து வழிபடுங்கள். 'லட்சுமி நரசிம்மரே! நான் பட்ட கடனை அடைக்க நல்வழி காட்டுங்கள்' என வேண்டுங்கள். ஒரு மண்டல காலத்திற்கு (48 நாள்) பானகம் அல்லது காய்ச்சிய பால் நைவேத்யம் செய்து பிரசாதமாகச் சாப்பிடுங்கள். 3. குளிகை நேரத்தில் கடனை திருப்பி செலுத்த ஆரம்பியுங்கள். விரைவில் கடனை அடைப்பீர்கள். குளிகை நேரம் ஞாயிறு: மதியம் 3:00 - 4:30 மணிதிங்கள்: மதியம் 1:30 - 3:00 மணிசெவ்வாய்: மதியம் 12:00 - 1:30 மணிபுதன்: காலை 10:30 - 12:00 மணிவியாழன்: காலை 9:00 - 10:30 மணிவெள்ளி: காலை 7:31 - 9:00 மணிசனி: காலை 6:00 - 7:30 மணி