உள்ளூர் செய்திகள்

தடை நீக்கும் மாவிளக்கு

பங்குனி உத்திரத்தன்று திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வள்ளி திருமணம் நடக்கும். திருப்பள்ளியெழுச்சி முடிந்து முருகப்பெருமான் கருவறைக்குச் சென்றதும் அபிஷேகம் நடக்கும். அதன்பின் பெரிய பூஞ்சப்பரத்தில் புறப்பாடாகி தவம் மேற்கொள்ளச் செல்வார். மாலையில் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளும் முருகன் பந்தல் மண்டபத்தை அடைவார். அங்கு திருமணக்கோலத்தில் வள்ளி எழுந்தருள மாலை மாற்றும் வைபவம் நடக்கும். அப்போது மாவிளக்கு ஏற்றி வழிபட திருமணத்தடை நீங்கும்.