சூரிய வம்சம்
UPDATED : ஜூன் 14, 2024 | ADDED : ஜூன் 14, 2024
அயோத்தியை ஆட்சி செய்த வம்சம் சூரியவம்சம். நீதி, நேர்மை தவறாமல் ஆட்சிபுரியும் நல்ல மன்னர்கள் பிறந்த குலம் இது. அவர்களில் சிலர், * துன்பம் வந்தாலும் உண்மையில் இருந்து விலகாமல் உண்மை பேசியவர் அரிச்சந்திரன். * சனி தோஷத்தை போக்கும் நளச்சக்கரவர்த்தி. * பசுக்களுக்கு வாழ்வு கொடுத்த திலீபச் சக்கரவர்த்தி. * ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் என வாழ்ந்து காட்டிய ஸ்ரீராமர். இவர்களைப் போல் மகாபாரதத்தில் வரும் வள்ளல் கர்ணனும் சூரியவம்சத்தில் வந்தவரே.