உள்ளூர் செய்திகள்

நான்கு வேதம்

ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என வேதங்கள் நான்காகும். 'ரிக்' என்றால் 'துதித்தல்'. ரிக்வேதம் இந்திரன், வருணன் ஆகிய தேவர்களைப் போற்றுகிறது. 'யஜ்' என்றால் 'வழிபடுதல்'. வேள்வி செய்து வழிபடும் முறையை யஜுர் சொல்கிறது. 'ஸாம்' என்றால் 'சந்தோஷப்படுத்துதல்' அல்லது 'சமாதானப்படுத்துதல்'. இனிய பாடல்களாக சாம வேதம் அமைந்துள்ளது. அதாவது ரிக்வேதத்தில் உள்ள பெரும்பாலான துதிகள் சாமவேதத்தில் பாடல்களாக அமைந்துள்ளன. சங்கீதத்திற்கு மூலமாக இருப்பது சாமகானம். இதை சிறப்பிக்கும் விதமாக கீதையில் கிருஷ்ணர், 'வேதங்களில் நான் சாமவேதமாக இருக்கிறேன்' என்கிறார். அதுபோல் 'சாமகானப் பிரியா' என அம்பிகையை லலிதா சகஸ்ர நாமம் போற்றுகிறது. கர்நாடக இசையின் மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகள், மதுரை மீனாட்சியம்மனை 'சாமகான வினோதினி' என போற்றுகிறார்.'அதர்வன்' என்பதற்கு 'அக்னியையும், சோமனையும் வழிபடும் மதகுரு' என பொருள். அதர்வண மகரிஷி மூலம் வந்த வேதம் என்பதால் இதற்கு அதர்வண வேதம் எனப் பெயர். இதில் எதிரிபயம், ஆபத்தில் இருந்து விடுவிக்கும் மந்திரங்கள் உள்ளன.