உருகுதே! மருகுதே!!
UPDATED : ஜூன் 14, 2024 | ADDED : ஜூன் 14, 2024
மனம், மொழி, மெய்களால் திருமாலைச் சரணடைந்தவர்கள் ஆழ்வார்கள். அவர்களில் ஒருவரான குலசேகராழ்வார் ஸ்ரீரங்கம், திருப்பதி, வித்துவக்கோடு. திருக்கண்ணபுரம், சிதம்பரம், சித்ரகூடம் ஆகிய தலங்களில் பாசுரம் பாடியுள்ளார். வித்துவக்கோடு பாசுரத்தில், தாயின் அன்புக்கு ஏங்கும் குழந்தை, கணவனையே நம்பி வாழும் மனைவி, மன்னரை எதிர்பார்த்து நிற்கும் மக்கள், மருத்துவரை பூரணமாக நம்பும் நோயாளியைப் போல உன்னையே நம்பியே வாழ்கிறேன் என திருமாலிடம் உருகுகிறார் குலசேகராழ்வார்.