ஜம்முன்னு வாழணுமா...
UPDATED : மார் 27, 2021 | ADDED : மார் 27, 2021
குழந்தைகள் வீட்டில் சப்தமிட்டபடி விளையாடினால் 'கம்முன்னு இருங்க' என்று பெரியவர்கள் கண்டிப்பர். 'கம்' என்ற சொல் அமைதியைக் குறிக்கிறது. ஆன்மிகத்தில் முன்னேற, 'கம்' என்று தான் இருக்க வேண்டும் என்கின்றனர் அருளாளர்கள். 'கம்' என்பது விநாயகருக்குரிய பீஜ மந்திரம். பீஜம் என்றால் 'விதை'. வயலில் விதை விதைத்தால் பயிர் வளரும். பக்தியோடு 'கம்' என்னும் மந்திரத்தைச் சொல்லி, கணபதியின் திருவடிகளைப் பிடித்தால் ஜம்முன்னு வாழலாம். கணபதிக்குரிய பீஜ மந்திரம் 'ஓம் கம் கணபதயே நம'' என்பதாகும்.