உள்ளூர் செய்திகள்

முன்னோரை மறக்காதே

ஒருவர் வாழ்வில் முன்னேற வேண்டுமானால் அவருக்கு முன்னோர் ஆசி அவசியம். இல்லாவிட்டால் வம்சமே பாதிக்கும். இது குறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் தாமோதர தீட்சிதர்(சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதரின் பேரன்) விளக்குகிறார்1950ல் கேரளா, கோழிக்கோட்டில் சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் 'முன்னோர் வழிபாடு' பற்றி பேச சென்றிருந்தார். அங்கு கேரள உயர்நீதிமன்ற நீதிபதியைச் சந்தித்தார். முன்னோர் வழிபாட்டில் நம்பிக்கை இல்லாத அவர், பெற்றோருக்கு திதி, தர்ப்பணம் செய்யாமல் விட்டு விட்டதாக தெரிவித்தார். முன்னோர் வழிபாட்டை முறையாக செய்யவில்லை என்றால் குழந்தைகள் மனநோயால் அவதிப்படலாம் என தீட்சிதர் தெரிவித்தார்.இதைக் கேட்டவுடன் மனைவி, மகன், மகள் மூவரும் மனநோயால் அவதிப்படுவதைச் சொல்லி வருந்தினார். தில ஹோமம் நடத்தி முன்னோர்களை வழிபடுங்கள் பிரச்னை தீரும் என தீட்சிதர் யோசனை சொன்னார். அதன்படி நீதிபதியின் குடும்பத்தில் பிரச்னை தீர்ந்தது. நாமும் முன்னோரை மறக்காமல் வழிபடுவோம்.