உள்ளூர் செய்திகள்

வெளியூர் போனாலும் தர்ப்பணம் செய்யுங்க!

ஆடி அமாவாசை நாளில், வெளியூர் பிரயாணம் செய்ய நேரிட்டால் தர்ப்பணம் செய்யாமல் போய் விடக்கூடும். வெளியூரில் இருந்தாலும் தர்ப்பணம் செய்வது அவசியம். பணி காரணமாக வெளியூரில் இருப்பவர்களும் செய்யாமல் விட்டுவிடக் கூடாது. இதற்கு மாற்றாக மற்றொரு நாளில் செய்வதற்கோ, பிராயச்சித்தம் தேடுவதற்கோ வழியில்லை.