கோவிந்தா...கோவிந்தா!
UPDATED : ஆக 23, 2022 | ADDED : ஆக 23, 2022
கடன் வாங்கியவர் பணத்தை உரியவருக்கு திருப்பி தரவில்லை என்றால் 'கோவிந்தா' என்று சொல்லும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இதற்கு உண்மையான அர்த்தம் இது தான். கோவிந்தாவை 'கோ இந்தா' என பிரிக்கலாம். அப்போது 'கோ' என்றால் 'பசு' 'இந்தா' என்றால் 'வாங்கிக்கொள்' என்று பொருள்படும். கோவிந்தா... கோவிந்தா... என சொல்லச்சொல்ல கோதானம் செய்த புண்ணியம் கிடைக்கும். எப்போதும் கோவிந்தா நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள். பசுக்களுடன் விளையாடிய கிருஷ்ணனின் அருளை பூரணமாக பெறுவோம்.