சனீஸ்வரரின் குருநாதர்
UPDATED : நவ 29, 2021 | ADDED : நவ 29, 2021
சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில் ஒருவர் பைரவர். இவரை 'வைரவர்' என்றும் சொல்வர். இவரது வாகனம் நாய். எல்லா சிவன் கோயிலிலும் வட கிழக்கு மூலையில் நின்ற கோலத்தில் இவர் காட்சியளிப்பார். பாம்பை பூணுாலாகவும், பிறையைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக்கயிறு, அங்குசம் ஏந்தியிருக்கும் இவர் ஆடையில்லாமல் காட்சி தருபவர். பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவக்கிரகங்கள், காலத்தையும் கட்டுப்படுத்தும் சக்தி கொண்ட பைரவரே சனீஸ்வரரின் குருநாதராகத் திகழ்கிறார்.