தீயில் தோன்றிய கிருஷ்ணா
UPDATED : ஆக 23, 2022 | ADDED : ஆக 23, 2022
பாஞ்சால நாட்டின் மன்னரான துருபதன் கர்வம் மிக்கவன். அவனது கர்வத்தை அடக்க எண்ணிய குருநாதரான துரோணர், பாண்டவர்களின் மூலமாக துருபதனின் பாதி நாட்டை கைப்பற்றினார். இதனால் கோபம் கொண்ட துருபதன், யாகம் ஒன்றை நடத்தி துரோணரைக் கொல்லும் வலிமை கொண்ட ஆண்மகன் தனக்கு மகனாக பிறக்க வேண்டும் என வழிபட்டான். யாக குண்டத்தில் இருந்து ஆண் குழந்தை வந்தது. அவனே 'திருஷ்டத்யும்னன்'. பாரதப்போரில் துரோணாச்சாரியாரைக் கொன்றவன் இவனே. அதே குண்டத்தில் இருந்து பெண் குழந்தை ஒன்றும் வந்தது. 'கிருஷ்ணா' (கரியவள்) எனப் பெயரிட்டு வளர்த்தான். அவளே துருபதன் மகள் என்பதால் 'திரவுபதி' என பெயர் பெற்றாள்.