மங்களப் பறவை
UPDATED : ஆக 05, 2016 | ADDED : ஆக 05, 2016
கருடன் வானத்தில் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாகும். கோவிலில் கும்பாபிஷேகம் நடக்கும் போது, கருடன் வட்டமிட்டால் நல்ல சகுனம் என்று நம்பப்படுகிறது. சபரிமலையில் நடக்கும் மகரஜோதி தரிசனத்துக்காக பந்தளம் அரண்மனையில் இருந்து திருவாபரணப் பெட்டி ஊர்வலமாக வரும்போது கருடன் மேலே பறந்து வருவதைப் பார்க்கலாம்.