உள்ளூர் செய்திகள்

திருமணமாம் திருமணம்

* நீ விரும்புபவரை விட உன்னை விரும்புபவரை திருமணம் செய்வதே மகிழ்ச்சிக்கான வழி.* திருமணம் மூலம் இரு மனங்கள் இணையவில்லை. இரு குடும்பத்தினர் இணைகிறார்கள். * விட்டுக் கொடுக்கும் எண்ணமே திருமண வாழ்வின் ஆகச் சிறந்த முதல் தியாகம்.* திருமணம் என்பது சரியான துணையை தேர்ந்தெடுப்பது அல்ல. சரியான துணையாக வாழ்வது.* ஈகோ எங்கு முடிகிறதோ அங்கு இனிமையான இல்லற வாழ்க்கை தொடங்குகிறது.* கோபமுடன் சண்டையிட்ட பின்பு வருந்துவதை விட, ஒருவரை ஒருவர் முகம் பார்க்கும் போது சிரிப்பை அடக்குவதே நல்ல தம்பதியர் பண்பு. * அதிகம் புரிதல் இருக்கும் தம்பதியரின் முகஜாடை கூட ஒன்று போல அமைந்திருக்கும்.* பணம், செல்வம், அழகு, பதவி, அந்தஸ்து பார்த்தே திருமணம் நிச்சயப்படுகிறது. ஆனால் அன்பு இருந்தால் மட்டுமே இந்த பந்தம் நீடிக்கும். * திருமணத்தின் மூலம் தோழியை ஒருவன் மனைவியாக்கி கொள்ளலாம். ஆனால் மனைவியை தோழியாக்க பரந்த மனம் வேண்டும்.* மனைவியின் நகைகள் பற்றிய அறியாத கணவருக்கும், கணவரின் சம்பளம் பற்றிய அறியாத மனைவிக்கும் மனப்பொருத்தம் அதிகம் இருக்கும்.* மகிழ்ச்சியான திருமண வாழ்வின் ரகசியம் என்பது இன்று வரை யாருக்கும் புரியாத ரகசியமாகவே உள்ளது. * பெண்ணுக்கு திருமணம் என்பது மரத்தை வேருடன் பிடுங்கி வேறிடத்தில் நடுவது போன்றது.