உள்ளூர் செய்திகள்

நாள் பார்க்காமல் திருமணமா! பரிகாரம் இருக்கு பங்குனியில்!

நாள், நட்சத்திரம் பார்க்காமல் சிலர் திருமணம் செய்து கொள்கிறார்கள். குறிப்பாக, காதல் திருமணங்கள் அவசர அவசரமாக நடந்து விடுகின்றன. இவர்களது மனதில், எதுவும் நடந்து விடுமோ என்ற பதட்டம் இருக்கிறது. இவர்கள், பங்குனிமாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியில் இருந்து, நவமி வரை ஒன்பது நாட்கள், மாலையில் விளக்கேற்றி அம்பாளை வழிபடலாம். அம்பாளுக்குரிய பாடல்களைப் பாடி, தங்கள் மாங்கல்யத்திற்கு பங்கம் வராமல் இருக்க வேண்டலாம். பங்குனி 15ல் துவங்கி 23 வரை (மார்ச்28 - ஏப்.5) இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். ஒரு காலத்தில், இந்த நாட்களை வசந்த நவராத்திரி என்ற பெயரில் கோவில்களில் கொண்டாடினர். நவராத்திரி பிரபலமான பிறகு, இதைக் கொண்டாடுவது நின்று விட்டது.