உள்ளூர் செய்திகள்

யமுனை ஆற்றங்கரையிலே...

யமுனை ஆற்றங்கரையில் கிருஷ்ணர் பசுக்களை மேய்க்கச் செல்வார். யமுனையைக் கண்டதும் குளிக்கும் எண்ணம் அவருக்கு வந்து விடும். குளித்ததால் ஏற்பட்ட பசி தீர நண்பர்களுடன் மணலில் உட்காருவார். வெண்ணெய், பால், தயிர், பழங்கள் என எடுத்துச் சென்ற உணவுகளை உண்டபடியே விளையாடி மகிழ்வார். அவர்களைக் கண்ட தேவர்கள், 'இவர்கள் என்ன தவம் செய்தார்களோ? கடவுளுடன் உறவாடி மகிழும் பாக்கியம் நமக்கு கிடைக்கவில்லையே' என வருந்துவர். ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலர்ந்தது போல கிருஷ்ணர் நண்பர்களுடன் சாப்பிடும் காட்சி இருக்கும்.