உள்ளூர் செய்திகள்

வில்வ இலையில் இருப்பவள்

மகாலட்சுமி அஷ்டோத்திரத்தில் 78வது நாமாவளி 'பில்வ நிலையாயை நம:' என்று மகாலட்சுமியைப் போற்றுகிறது. 'வில்வ இலையில் இருப்பவள்' என்பது இதன் பொருள். இதனால் 'ஸ்ரீவிருட்சம்' என்று வில்வ மரத்தை அழைப்பர். லட்சுமி மந்திரத்தை வில்வமரப் பலகையில் வரைந்து வழிபட்டால் செல்வம் பெருகும். வில்வ இலைகளால் சிவனை திங்கட்கிழமைகளில் அர்ச்சனை செய்ய பாவம் தீரும். இம்மரங்கள் இமயமலையின் அடிவாரத்திலுள்ள தராய்க்காடுகளில் அதிகளவில் காணப்படுகின்றன.