உள்ளூர் செய்திகள்

அம்பாளுக்கு சிவராத்திரி

நாமெல்லாம்அம்பாளுக்கு ஒன்பது நாள் நவராத்திரி கொண்டாடுகிறோம். தினமும் ஒவ்வொரு விதமாக அலங்காரம் செய்கிறோம். புதுக்கோட்டை சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலிலோ, சிவராத்திரி விழா நடக்கிறது. சக்திக்குள் சிவன் அடக்கம் என்ற ரீதியில் அம்பாளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இவ்வாறு செய்கிறார்கள். சிவனுடன் தொடர்புடைய மற்றொரு அம்பாள் தஞ்சாவூர் கோடியம்மன். இவள் தனது தலையில் சிவனையே சூடியிருப்பதால் அம்மனுக்கு முன் நந்தி வாகனம் அமைக்கப்பட்டுள்ளது.