உள்ளூர் செய்திகள்

சோறு கண்ட இடம் சொர்க்கம்

விருந்துக்கு போன இடத்தில் நீண்டநாள் தங்கினால், 'உனக்கு சோறு கண்ட இடம் சொர்க்கம் ஆயிற்றே' என வேடிக்கையாக சொல்வதுண்டு. இதன் உண்மை அர்த்தம் என்ன தெரியுமா?சிவன் கோயில்களில் ஐப்பசி பவுர்ணமியன்று வெள்ளை அன்னத்தால் அபிஷேகம் நடக்கும். அதை தரிசித்தால் சொர்க்கத்தில் வாழும் பாக்கியம் கிடைக்கும். இதனால் தான் 'சோறு கண்ட இடம் சொர்க்கம்' எனக் குறிப்பிட்டனர். காலப்போக்கில் கேலி செய்யும் விதமாக இது மாறி விட்டது.