நினைத்தது நிறைவேறும்
UPDATED : அக் 27, 2023 | ADDED : அக் 27, 2023
லிங்கமே மலையாக அமைந்தமலை, பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக இருப்பது அண்ணாமலை. இங்கு சிவபெருமான் அண்ணாமலையார் என்றும், அம்பாள் அபித குஜாம்பாள் என்ற பெயரில் அருள்பாலிக்கின்றனர். இங்கு சிவபெருமான் கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திர நாளில் அக்னி வடிவமாக விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் காட்சி தந்தார். அந்த ஜோதியே நெருப்பு மலையாக மாறியது. இதுதான் திருவண்ணாமலை. இம்மலையை வலம் வந்து அண்ணாமலையாரை வணங்கினால் நினைத்தது நிறைவேறும்.