புத்திசாலி குழந்தை பிறக்க முக்குள தீர்த்தம்
UPDATED : மார் 10, 2017 | ADDED : மார் 10, 2017
கிரகங்களில் புதனுக்குரிய தலம் திருவெண்காடு. இங்குள்ள சிவனுக்கு சுவேதாரண்யேஸ்வரர் என்றும், அம்பாளுக்கு பிரம்ம வித்யாம்பிகை என்றும் பெயர். இங்கு, மாசிமகத்தன்று விசேஷ பூஜை நடக்கும். தங்களுக்கு புத்திசாலி குழந்தைகள் பிறக்க வேண்டி, புதுமணத்தம்பதிகள் இங்குள்ள சூரிய, சந்திர, அக்னி தீர்த்தங்களின் நீரை தலையில் தெளித்து, சுவாமி, அம்பிகையை வழிபடுகிறார்கள்.