உள்ளூர் செய்திகள்

அப்பர் கண்ட கயிலைக்காட்சி

தஞ்சாவூர் அருகே திருவையாறு ஐயாறப்பர் கோயில் உள்ளது. ஆடி அமாவாசை அன்று (28.7.2022) அப்பர் கண்ட கயிலைக்காட்சி விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.நால்வரில் ஒருவர் அப்பர். இவர் சிவபெருமானை தரிசிக்க கயிலைமலைக்கு புறப்பட்டார். வயது முதிர்வால் அங்கு சென்ற அவரால் தொடர்ந்து நடக்க முடியாமல் தவழ்ந்தார். அப்போது அங்கு சிவபெருமான் அந்தணர் வடிவில் தோன்றி 'அப்பரே இங்குள்ள குளத்தில் மூழ்கி திருவையாறு குளத்தில் எழுங்கள். அங்கு கயிலை காட்சி கிடைக்கும்' எனக் கூறி மறைந்தார். அப்பரும் அவ்வாறே செய்ய கயிலை காட்சியை கண்டார். அங்கு யானை, புறா, மயில், மான், குயில், காளை, பசு போன்ற உயிரினங்கள் துணையோடு சிவபெருமானை வணங்குவதை கண்ட அப்பர் மாதர்ப் பிறைக்கண்ணி யானை... எனத்தொடங்கும் தேவாரப்பாடலை பாடினார். ஆண்டு தோறும் திருவையாற்றில் கொண்டாடப்படும் இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.