மகிழ்ச்சி தரும் பண்பு
UPDATED : அக் 26, 2014 | ADDED : அக் 26, 2014
* கடவுள் மனமாகிய வீட்டில் இருந்தபடி நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறார்.* பண்பில்லாத மனிதர்கள் ஒரு இடத்தை விட்டுச் சென்ற பிறகே மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறார்கள்.* துன்பம் நேரும் போது மட்டும் கடவுளை நினைப்பது கூடாது. வழிபாடு என்பது அன்றாட கடமையாக இருக்க வேண்டும்.* நல்லவர்களின் வழிபாடு வலிமை மிக்கது. அதனால் உண்டாகும் நன்மைக்கும் எல்லை கிடையாது.* அன்புடன் வழங்கும் எளிய காணிக்கையைக் கூட கடவுள் விருப்பத்துடன் ஏற்றுக் கொள்கிறார். - சின்மயானந்தர்