ஒரே ஒரு பூ போதுமே!
UPDATED : நவ 03, 2014 | ADDED : நவ 03, 2014
* பெரிய மலர் மாலை கடவுளுக்குத் தேவையில்லை. ஒரே ஒரு பூவை மனத்தூய்மையுடன் அவரின் காலடியில் போட்டாலும் அருள் தர காத்திருக்கிறார். * மனநிறைவு கொண்டவனுக்கு உடலின் துன்பம் பெரிதாகத் தோன்றுவதில்லை.* எல்லா உயிர்களிலும், எல்லா பொருள்களிலும் தெய்வத்தன்மையை உணர்பவனே உண்மையான பக்திமான்.* அறிந்தாலும், அறியாவிட்டாலும் மனமாகிய வீட்டில் இருந்து நம்மை இயக்கிக் கொண்டிருப்பவர் கடவுள் ஒருவர் மட்டுமே.- சின்மயானந்தர்