உடலுக்கு நலன்தரும் செயல்
* எங்கள் இறைவனே ! நாங்கள் தாங்க இயலாத பாரத்தை எங்கள் மீது சுமத்திவிடாதே! எங்களைப் பொறுத்தருள்வாயாக! எங்களுக்கு மன்னிப்பு வழங்குவாயாக! எங்கள் மீது கருணை பொழிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலனாவாய்!* எங்கள் இறைவனே! எங்கள் மனைவிமார்களையும் எங்கள் குழந்தைகளையும் எங்கள் கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கக் கூடியவர்களாய் விளங்கச் செய்வாயாக! * என் இறைவனே! சிறு வயதில் எவ்வாறு என்னை என் பெற்றோர் கருணையுடனும், பாசத்துடனும் வளர்த்தார்களோ அவ்வாறே அவர்கள் மீது கருணை புரிவாயாக!* உண்ணும் போதும், பருகும் போதும் வயிற்றை நிரப்புவதில் கவனமாக இருங்கள். திண்ணமாக, (வயிற்றை நிரப்புவது) உடலுக்கு கேடு விளைவிக்கும்; நோயை உண்டாக்கும்; தொழுகையில் சோம்பலை ஏற்படுத்தும். எனவே, இவ்விரண்டிலும் (உண்ணுவதிலும், பருகுவதிலும்) கவனமாயிருப்பது உடலுக்கு நலன் தரும்; செலவைக் குறைக்கும்.* மனிதனுக்கு அவனுடைய வயிற்றைவிட மிகக் கெட்ட பாத்திரம் வேறொன்றுமில்லை. எனவே அவனை நிலை நிறுத்த சில கவளங்களே போதுமானவையாகும். (வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)