உள்ளூர் செய்திகள்

உழைப்பை மதியுங்கள்

* உழைப்பாளிகளின் வியர்வை உலர்வதற்கு முன்பே அவர்களின் கூலியைக் கொடுத்து விடுவீராக.* உழைப்பாளிகளின் கூலியை கால தாமதமாகக் கொடுப்போர் அநியாயகாரர்களாகும்.* அல்லாஹ்வுக்கும், தன் முதலாளிக்கும் கட்டுப்பட்டு முறையோடு கடமைகளைச் செய்யும் உழைப்பாளிகள், கியாமநாளில் இரு மடங்கு நன்மைகள் அடைவார்கள்.* குறையுள்ள பொருளை ஒருவன் அதைப் பற்றி தெளிவுபடுத்தாமல் விற்பனை செய்தால் அவன் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி விட்டான் அல்லது வானவர்கள் அவனைச் சபிக்கின்றனர்.* செத்த ஆட்டுக்குரியவன் அதன்மீது வைக்கும் அளவு கூட இறைவன் இந்த உலகத்தின் மீது மதிப்பு வைக்கவில்லை.* உலகத்தை அல்லாஹ் கொசுவின் ஒரு சிறகுக்கு சமமாக மதித்திருந்தால், தன்னை நிராகரிப்பவருக்கு தாகம் தீர்ப்பதற்கு தண்ணீரைக் கூட வழங்கி இருக்க மாட்டான்.- நபிகள் நாயகம்