நல்ல கணவராய் இருங்கள்!
UPDATED : மே 20, 2013 | ADDED : மே 20, 2013
* பொருளுக்காக மட்டும் நீங்கள் பேராசை கொண்டு பெண்களை திருமணம் செய்து கொள்ளாதீர்கள். அது பாவகாரியங்களை செய்வதற்கு தூண்டுகோலாக இருக்கும். * நெருங்கிய உறவில் திருமணம் செய்யாதீர்கள். ஏனென்றால் பிறக்கும் குழந்தை குறையுள்ளதாக இருக்கும்.* குறைந்த செலவில் அமையப் பெற்ற திருமணமே இறையருளை அள்ளித் தருவதாகும்.* திருமணத்தை விளம்பரப்படுத்துங்கள். அவற்றை பள்ளிவாசலில் நடத்துங்கள். அதற்காக முரசு கொட்டுங்கள்.* ஒருவரை ஒருவர் நேசிப்பதற்கு இல்லற வாழ்வைத் தவிர வேறு எதுவுமே இல்லை.* மனைவியிடம் நல்லவரே உங்களில் நல்லவர். நான் என் மனைவிமார்களுக்கு நல்லவனாக இருக்கிறேன்.* குணம் கெட்ட ஆயிரம் ஆண்களை விட நற்குணம் கொண்ட ஒரு பெண்ணே சிறந்தவள்.* நீங்கள் கற்புடையவர்களாக இருங்கள். உங்கள் மனைவியரும் கற்புடையவர்காக இருப்பார்கள்.- நபிகள் நாயகம்