இனிமையாக நடந்து கொள்ளுங்கள்
* "சற்று பூமியில் சுற்றித் திரிந்து குற்றவாளிகளின் கதி என்னவாயிற்று என்பதைப் பாருங்கள்''* கொடுமைக்காரர்கள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை.(திருக்குர்ஆன் 28:37)* இறைவன் அவர்களுக்கு அக்கிரமம் புரிபவனாக இருந்ததில்லை. ஆனால், தமக்குத்தாமே அவர்கள் அக்கிரமம் புரிந்து கொண்டிருந்தார்கள். இறுதியில் எவர்கள் தீவினைகள் செய்து வந்தார்களோ அவர்களுடைய இறுதி முடிவு மிகவும் தீயதாகிவிட்டது. * இந்த அக்கிரமக்காரர்களின் செயல்களை இறைவன் கவனிக்காமல் இருக்கின்றான் என்று (நபியே!) நீர் கருதவேண்டாம். அவர்களை அவன் விட்டு வைத்திருப்பது ஒரு குறிப்பிட்ட நாள் வரைக்கும் தான்! அந்நாளில் அவர்களின் விழிகள் மருளும்; அவர்கள் தம் தலைகளை மேலே உயர்த்திக் கொண்டு ஓடுவார்கள். அவர்களின் பார்வை நிலைகுத்தியிருக்கும். மேலும், அவர்களுடைய இதயங்கள் சூனியமாகி விட்டிருக்கும். வேதனை வரக்கூடிய அந்நாளைப் பற்றி மக்களுக்கு எச்சரிக்கை செய்வீராக. (வேத வரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)