ஆசையே பாவங்களின் வேர்
UPDATED : டிச 11, 2017 | ADDED : டிச 11, 2017
*உலக ஆசை பாவங்களின் வேராகும். நீ அதிகம் விரும்பினால், குருடனாகவும்செவிடனாகவும் மாற்றி விடும்.*உலகம் ஒரு பாலம். அதைக் கடந்து செல்ல முயற்சி செய்யுங்கள். அந்த பாலத்திலேயே கட்டடம் கட்டி, தங்குவதற்கு சிந்தனை செய்யாதீர்கள்.*கூட்டாக சேர்ந்து வாழுங்கள். சொர்க்கத்தை விரும்புபவர்கள் ஒற்றுமையை கடைபிடியுங்கள்.*நோய் என்பது இறைவனின் சோதனை. அதனை கொண்டு அடியார்களை பரிசுத்தப்படுத்துகின்றான்.- நபிகள் நாயகம்