உள்ளூர் செய்திகள்

தர்மம் செய்யுங்கள்

* கற்றுக் கொடுப்பவரும், கற்றுக் கொள்பவரும் நேர்வழியில் இருக்கின்றனர். இந்த நிலை அற்றவர்களிடம் எந்த நல்வழியுமில்லை.* அல்லாஹ்வின் சேவைக்கல்லாமல் உலக வாழ்வின் நோக்கத்திற்காக கல்வி கற்பவன் நரகத்தை இருப்பிடமாகக் கொள்ளட்டும்.* மனிதன் கல்விக்காக செய்கின்ற தர்மம் அவன் மரணித்த பிறகும் நன்மை பொழியும்.* தர்மம் செய்வதின் மூலம் உங்கள் பொருள்களைப் பாதுகாருங்கள். உங்கள் நோய்களைக் குணப்படுத்துங்கள்.* விருப்போடு தர்மம் செய்யுங்கள். வெறுப்போடு தர்மம் செய்யாதீர்கள்.* கஞ்சன் அல்லாஹ்வை விட்டும் தூரமாகி விடுவான்.* கருணை உள்ளம் கொண்டவன் தங்குமிடம் சொர்க்கமாகும். கஞ்சத்தனம் கொண்டவன் தங்குமிடம் நரகமாகும்.* கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை ஆகிய மூன்றும் நம்மை நாசப்படுத்தி விடும்.- நபிகள் நாயகம்