உள்ளூர் செய்திகள்

நற்செயல்களைச் செய்யுங்கள்

* பிரார்த்தனையைத் தவிர வேறு எந்த செயலாலும் விதியை மாற்றிக் கொள்ள முடியாது. நற்செயல்களைத் தவிர எந்தச் செயலாலும் ஆயுளை நீடிக்கச் செய்ய முடியாது.* எவர் ஒருவர் துன்பத்திற்கு ஆளானவரை நெருங்கி ஆறுதல் மனமிரங்கி கூறுகிறாரோ, அவருக்கு துன்பத்திற்கு ஆளானவருடைய நன்மைக்குச் சமமான நன்மை கிடைக்கும். * வெட்கம் நன்மைகளை இழுத்து வரும். உனக்கு வெட்கம் இல்லையாயின் உனது இஷ்டம் போல் நடந்து கொள்.* இறைவனிடத்தில் சிறந்தவர் யார் என்றால், தன்னுடைய நண்பர்களிடம் நல்லவராக நடப்பவரே!* உங்களுக்குள் அன்பளிப்புகளை பரிமாறிக் கொள்ளுங்கள். ஏனென்றால் அன்பளிப்புகளைக் கொடுப்பது மனதிலுள்ள பொறாமைகளை அழித்து விடுகின்றது.* கெட்டவர்களுடன் தோழமை கொள்ளாதே. ஏனென்றால் அவர்களுடன் தோழமை கொண்டால் அவர்களின் கணக்கில் உன்னையும் சேர்த்துக் கொள்ளப்படும்.- நபிகள் நாயகம்