உள்ளூர் செய்திகள்

சொர்க்கம் வேண்டுமா?

* பெரும் பாவியை குறித்து புறம் பேசுவது குற்றமாகாது. தான் மறைவாக செய்கின்ற பாவங்களை வெளியில் சொல்பவனைக் குறித்து புறம் பேசுவது குற்றமாகாது.* மனைவியை திருப்திப்படுத்துவதற்காக பொய் சொல்லலாம். போர்க்களத்தில் எதிரியை தந்திரத்தால் வெல்வதற்காக பொய் சொல்லலாம்.* அல்லாஹ்வுக்கு மிக பிரியத்திற்குரிய தளம் பள்ளிவாசலாகும். அவனுக்கு மிக மிக வெறுப்புக்குஉரிய இடம் கடைவீதியாகும்.* சொர்க்கம் வேண்டுமா? விருப்பம் கொண்டவர் பெற்றோர்களை சந்தோஷப்படுத்தவும்.* நீங்கள் இரவில் அதிகமாக தூங்காதீர்கள். ஏனென்றால் அதிகமாக தூங்கினால் கியாமநாளில் ஏழையாக எழுப்பப்படுவீர்கள்.* பொறாமை மனிதனுடைய நன்மைகளை அழித்து விடுகிறது.- நபிகள் நாயகம்