உள்ளூர் செய்திகள்

இல்லறம் நேசத்தை வளர்க்கும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:* இளைஞர்களே! உங்களில் திருமணத்தின் பொறுப்பை சுமக்கும் சக்தி படைத்தவர் மணம் புரிந்து கொள்ளட்டும். ஏனெனில், திருமணம் பார்வையைத் தாழ்த்துகின்றது. திருமணப் பொறுப்பை சுமக்கச் சக்தியற்றவர், இச்சையின் வேகத்தைத் தணித்திட அவ்வப்போது நோன்பு வைத்துக் கொள்ளட்டும்.(நூல்: புகாரி, முஸ்லிம்)* ஒருவர் திருமணம் செய்து கொண்டால், அவர் இறைநெறியில் ஒரு பகுதியை நிறைவு செய்து விட்டார். எஞ்சிய பகுதியை இறைவனை அஞ்சி வாழ்வதன் மூலம் பெற்றுக் கொள்ளட்டும். (நூல்: பைஹகி)* ஒருவரை ஒருவர் நேசிப்பதற்கு இல்லறத்தைப் போன்று வேறு எதனையும் காண மாட்டீர்கள். (நூல்: இப்னுமாஜா)இறைவன் கூறுகின்றான்:* மேலும், துறவுகோட்பாட்டை அவர்களாகவே தோற்றுவித்துக் கொண்டார்கள். நாம் அதனை அவர்கள் மீது கடமையாக்கவில்லை. ஆயினும், இறைவனின் திருப்தியைப் பெறும் பொருட்டு அவர்கள் தாமாகவே இந்த நூதன முறையைத் தோற்றுவித்துக் கொண்டனர். (திருக்குர்ஆன்57:27)(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)