ஏழைக்கும் உறவுக்கும் தானம்
UPDATED : டிச 05, 2011 | ADDED : டிச 05, 2011
* ஒருவன் தன் கையால் உழைப்பதும் மோசடி செய்யாமல், பொய் பேசாமல் ஒருவன் நடத்தும் வாணிபமும் தான் யாவற்றிலும் சிறந்த சம்பாத்தியம்.* பணியாளர்களுக்கு உபசரியுங்கள். நீங்கள் உண்பதிலிருந்து அவர்களுக்கும் உணவு அளியுங்கள்.* தந்தை தன் பிள்ளைக்கு அளிக்கும் மாபெரும் பரிசு நல்லொழுக்கமே.* உங்களிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்வது உங்கள் குழந்தைகளின் கடமை; உங்கள் குழந்தைகளைச் சமமாக நடத்துவது உங்களின் கடமை.* ஏழைகளுக்கு தானம் வழங்கினால் ஒரு நன்மை கிட்டும், உறவினர்களுக்கு தானம் வழங்கினால் இரண்டு நன்மைகள் கிட்டும். ஒன்று, தானம் வழங்கியதற்காகவும், மற்றொன்று உறவுகளை இணைத்ததற்காகவும்.* மண்ணிலுள்ள மனிதர்களை நீங்கள் நேசித்தால், விண்ணிலுள்ள இறைவன் உங்களை நேசிப்பான். நீங்கள் அன்பு செலுத்தாதவரை இறை நம்பிக்கையாளர்களாக முடியாது.- வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து