உள்ளூர் செய்திகள்

­பேராசை கொள்ளாதீர்கள்

* நாணமும் இறைநம்பிக்கையும் இணைந்தே உள்ளது. அதில் ஒன்று கெட்டுவிட்டால் இன்னொன்றும் கெட்டுவிடும்.* உங்களில் எவர் ஒரு தீய செயலைக் காண்கிறாரோ, அவர் அதனை தனது கைகளால் தடுக்கட்டும். அவரால் அது முடியவில்லையெனில் அதை நாவால் தடுக்கட்டும். அதையும் செய்ய முடியவில்லையெனில் அதை அவர் தம் மனதால் வெறுக்கட்டும். இது இறை நம்பிக்கையில் மிகவும் பலவீனமான நிலையாகும்.* செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகின்றானோ அதற்குரிய பலன்தான் அவனுக்குக் கிட்டும்.* இறைவன் உங்களில் சிலருக்கு சிலரை விட எதனைக் கொண்டு சிறப்பளித்திருக்கின்றானோ, அதனை அடைய நீங்கள் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்ததற்கேற்ப பங்கு உண்டு. மேலும் பெண்களுக்கு அவர்கள் சம்பாதித்ததற்கு ஏற்ப பங்கு உண்டு. இருப்பினும் இறைவனிடம் அவனுடைய அருளைக் கோரிய வண்ணம் இருங்கள்.* செல்வ வளம் என்பது அதிக செல்வத்தைப் பெறுவதல்ல. போதுமென்ற மனதைப் பெறுவதே உண்மையான செல்வமாகும்.-வேதவரிகளும் தூதர் மொழிகளும்