அதிகமாக தூங்காதே!
UPDATED : ஏப் 30, 2013 | ADDED : ஏப் 30, 2013
* பிறரை நன்மை செய்யத் தூண்டுங்கள். அதிலும் உங்களுக்கு நன்மை உண்டு. பிறர் செய்யும் தீமையை விட்டு தடை செய்யுங்கள். அதிலும் உங்களுக்கு நன்மை உண்டு.* தந்தையின் உடன்பிறப்பு சிறிய தந்தை, தாயின் உடன்பிறப்பு சிறிய தாய் இருவரும் தாய், தந்தைக்கு நிகரானவராகும்.* குறையாக இருந்தாலும் தொடர்ந்து செய்யக்கூடிய நற்செயல்களே அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமாக இருக்கும்.* நன்மை என்பது நல்லகுணம். தீமை என்பது உள்ளத்தில் மறைந்திருக்கும் கபடம். கபடத்தை பின்பற்றாதீர்கள்.* அதிகமான தூக்கம் உள்ளத்தை மரணிக்கச் செய்யும். அதனால், கவலைகள் உண்டாகும்.* கண்ணில்லாத குருடர்களுக்கு உதவி செய்பவரின் 100 குற்றங்கள் மன்னிக்கப்படும்.* மலர்ந்த முகத்துடன் இருப்பீராக! மலர்ந்த முகத்தவரை அல்லாஹ் நேசிக்கின்றான். கடுகடுத்த முகத்துடையவர்களை வெறுக்கின்றான்.- நபிகள் நாயகம்