உள்ளூர் செய்திகள்

சிரமத்துடன் சேர்ந்த இலகு

* நற்செயல் என்பது நற்குணத்தைப் பெறுவதாகும். எந்தச் செயலை நீ மனதில் நினைத்து அதனை பிறர் அறிவதை விரும்பவில்லையோ, அது பாவச் செயலாகும்.* அளவில் சிறிதாக இருப்பினும் தொடர்ந்து நிலையாக செய்யும் செயல்களையே இறைவன் நேசிக்கிறான்.* வறுமை மற்றும் துன்பத்தின் போது சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் நடக்கும் போராட்டத்தில் பொறுமையுடன் நிலைத்து இருப்பவர்கள் புண்ணியவான்கள் ஆவர்.* இறைவன் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக சிரமப்படுத்துவதில்லை. சிரமத்திற்குப் பின்னர் இலகுவை இறைவன் உண்டாக்குவான். உண்மையில் சிரமத்துடன் இலகுவும் இருக்கிறது.* எவர் இறைவனையும் மறுமையையும் ஏற்றுக் கொள்கிறாரோ அவர் நல்லவற்றைக் கூறவும்; அல்லது மவுனமாக இருங்கள்.* (நபியே!) மென்மையையும் மன்னிக்கும் போக்கையும் மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! இன்னும் அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக.- வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து